TAMIL CHRISTIAN WORSHIP AND PRAISE SONGS

A} உந்தன் சுயமதியே…
உந்தன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே1)மைந்தனே தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்

2)சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு – அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு

3)துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே – தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே

4)சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே – அவர்
ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே

5)நான் எனும் எண்ண மதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் – அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்

B}பக்தருடன் பாடுவேன்…

பல்லவி

பக்தருடன் பாடுவேன் – பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்

அனுபல்லவி

அன்பால் அணைக்கும் அருள்நாதர்
மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்தருடன் பாடுவேன்

சரணங்கள்

1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் – பக்தருடன்

2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – கு
அகமும் ஆண்டவன் அடியே,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே – பக்தருடன்

3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில்,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் – பக்தருடன்

C} கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை…
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
களிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2ஆமென் அல்லேலூயா-4

1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு-2
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்

2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்
நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்
நீதியின் பாதையிலே நடத்துவார்-2
நிழல்போல நம் வாழ்வை தொடருவார்

3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்றே பேசுவார்
இறுதிவரை எப்போதும் நடத்துவார்-2
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்

D} நீர் இல்லாத நாளெல்லாம்…
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா1)உயிரின் ஊற்றே நீயாவாய்
உலகின் ஓளியே நீயாவாய்
உறவின் பிறப்பே நீயாவாய்
உண்மையின் வழியே நீயாவாய்

2)எனது ஆற்றலும் நீயாவாய்
எனது வலிமையும் நீயாவாய்
எனது அரணும் நீயாவாய்
எனது கோட்டையும் நீயாவாய்

3)எனது நினைவும் நீயாவாய்
எனது மொழியும் நீயாவாய்
எனது மீட்பும் நீயாவாய்
எனது உயிர்ப்பும் நீயாவாய்

E} உம் பிரசன்னம் நாடி வந்தேன்…
உம் பிரசன்னம் நாடி வந்தேன்
கிருபையினால் நோக்கிடுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமேஎன் இயேசுவே என் இராஜனே
நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயம் அதில் ஆறுதலே
மனிதர்கள் என்னை பகைத்தாலும்
அஞ்சிடேனே நீர் இருக்கையிலே — என் இயேசுவே என் இராஜனே
நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே

2. வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலே
உம் பிரசன்னம் என் அடைக்கலமே
திக்கற்ற நிலைமையில் இருந்தாலும்
திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே — என் இயேசுவே என் இராஜனே
நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே

F} என்னை மறவா இயேசு நாதா…
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்1)வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே

2)பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை

3)தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
வல்லவா எந்தன் புகலிடமே

4)திக்கற்றோராய் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே

5)உன்னை தொடுவேன் என் கண்மணியை
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடும்

6)உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக் கொடியே

7)என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னை சேர்த்திடுமே

G} இயேசு அழைக்கிறார்…
இயேசு அழைக்கிறார்
இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள்
நீட்டியே இயேசு அழைக்கிறார்1)எத்துன்ப நேரத்திலும் ஆறுதல்
உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும்
இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்

2)கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணிபோல் காப்பார்
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே

3)சோர்வடையும் நேரத்தில்
பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய்

4)சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே

 

Advertisements

Was the post useful? Please leave your comments here

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: